கணிதம் இயற்பியல் வேதியல் உள்ளிட்ட
பள்ளி உயர்நிலையின் முதல் தர
பாடங்களை தேர்ந்தெடுத்தேன்.
எம் பணமும் வாழ்வியல் தரமும் உயர்த்தப்பட,
எம் பெற்றோர் எமக்களித்த
பகுத்தறிவால் .
விடுமுறை விட்டால் விருந்தாளியாக சொந்த
ஊருக்கு சென்று உலவிய கடேசி
தலைமுறை.
எப்போதாவது எண்ணை தேய்த்து சிகைக்காய் போட்டு
குளிக்கும் வெகு சிலரில்
யானும் ஒருவன்.
ஆங்கிலத்தில் பிழையின்றி பேசத்தெரியும் எனினும்
தமிழில் தத்திதத்தியேனும்
எழுதிவிடுவேன் .
பள்ளிப் படிப்பை பக்குவமாய் முடித்து
கணினி கன்னியின் மேல உள்ள
காதலால்
கரம பிடித்தேன் கல்லூரியில் கணினி தொழில்நுட்பத்தை,
கற்றும் கொண்டேன் கல்வியை கசடற.
பெற்ற பட்டம் வா வா என்றது அயல் நாட்டிற்கு
தாய் மண்தான் முக்கியம் என்று
முனக தனி மனிதனில்லை நான்,
“யாதும் ஊரே ” என்னும் கணியனின் வாக்கு இங்கு எனக்கு
உதவியது
தமிழர்களை தரம் தாழ்த்தியே காணும்
மானஸ்தர்களின் மத்தியில் மௌனமாய் சென்று செர்ந்துகொண்டேன்.
வசதிகளும் வசந்தங்களும் எளிதாகவே வந்து சேர்ந்தன அயல்
நாட்டில்
மயில் போல திரிந்த தமிழனை அன்னப்பறவை போல் ஆக்கியது
அந்நிய தேசம்
சமூக அந்தஸ்துகள் இருந்தும்
என் தாய் சமூகத்தின் மேல் அன்பின்றி
பிரிந்தவன் நான்
வெளிநாடேனக்கு வீடல்ல விடுதிஎன்று
வெம்பும் மனம் படைத்தவன்
வீறு நடை போட்டு வீடு வந்து
பிறந்திருந்த மகனுக்கும் மகளுக்கும்
“கதிரவன்” என்றும் “கயல்விழி”
என்றும்
பெயர் சூட்டி பெருமை கொள்ளும் தாழ்த்தப்பட்ட தமிழன்
சூழ் நிலைகளால் காணாமற் போன
குமரி மா கண்டம் நான்
பணித்துளியல்ல , தனித்துளியுமல்ல ,
“ மானிட சமுத்திரம் நான் ” .
அ . டோனி இஃனேஷியஸ்
ஐந்தாம் ஆண்டு மாணவன்,
ஆறாண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்பவியல்,
கணினி மற்றும் பொறியியல் துறை,
பாரதிதாசன் பல்கலைகழகம்,
காசாமலை வளாகம்,
திருச்சி-23.
No comments:
Post a Comment